மேலும் செய்திகள்
ஊட்டியில் நில அளவை கள பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
16-Jul-2025
கோவை; மத்திய அரசின், 'ஆபா' (ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்) எனும் பிரத்யேக சுகாதாரத்துறை அடையாள அட்டைக்கான பதிவு செயல்பாடுகள், செயலியில் மேற்கொள்ளும் பணி மாநில அளவில் காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசு காசநோய் ஒழிப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அனைத்து பகுதிகளிலும், விழிப்புணர்வு செயல்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், காசநோய் பாதிக்கப்பட்ட நோயாளிகள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் சிகிச்சை எளிதாக பெறும் வகையில், ஆபா எனும் பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.மாநில காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோய் ஒழிப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு, ஆபா செயலியில் பதிவு மேற்கொள்வது குறித்து ஆன்லைன் வழியாக நேற்று முன்தினம் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில், 30 களப்பணியாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.ஆபா அடையாள அட்டை என்பது, 14 இலக்க எண் கொண்டது. நோயாளிகளின் மருத்துவ நிலை குறித்து பதிவுகள் அதில், 'அப்டேட்' செய்யப்படுவதால், சிகிச்சை அளிப்பது எளிதாகும்.இதுகுறித்து, காசநோய் ஒழிப்பு திட்ட கோவை மாவட்ட அதிகாரி சக்தி வேல் கூறுகையில்,''ஆபா செயலியில் ஆதார் இணைப்பது, பதிவு செயல்பாடுகள் குறித்து ஆன்லைன் வாயிலாக, மாநில திட்ட அதிகாரிகள் களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். களப்பணியாளர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யவுள்ளனர். பதிவு செயல்பாடுகள் நிறைவு பெற்றால், எங்கு சென்றாலும் எளிதாக சிகிச்சையை தொடரமுடியும்,'' என்றார்.
16-Jul-2025