உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு அபிஷேகம்

ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் அம்மனுக்கு அபிஷேகம்

கோவை; ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில் கோவையில், அம்மனுக்கு ஆடிமஞ்சள் நீர் அபிஷேக விழா நேற்று நடந்தது. பொன்னையராஜபுரம் ஏ.கே.எஸ்.நகர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் இருந்து, மஞ்சள் நீர் குடங்களை தலையில் சுமந்து, பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். ஹிந்து முன்னணி மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட அன்னையர், தீர்த்த கலசத்துடன் ஏ.கே.எஸ். நகர் ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலிலிருந்து புறப்பட்டு, ஊர்வலமாக லைட் ஹவுஸ் மைதானத்தை அடைந்தனர். ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மகேஸ்வரிபாரதி, செயற்குழு உறுப்பினர்கள் அம்பிகாவதி, சஸ்மிதா, பிரேமலதா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை