உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு பணி பாதியில் நிறுத்தம் அதிகரித்து வரும் விபத்துக்கள்

ரோடு பணி பாதியில் நிறுத்தம் அதிகரித்து வரும் விபத்துக்கள்

உடுமலை,; உடுமலையில், ரோடு புதுப்பிக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடுமலை பழநி ரோடு, பஸ் ஸ்டாண்ட், நுாறு அடி ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டை இணைக்கும் வகையில், அனுஷம் நகர், யு.எஸ்.எஸ்., காலனி, ராஜகாளியம்மன் கோவில் ரோடு உள்ளது. பிரதான ரோடுகள் மட்டுமின்றி, ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் உள்ள இந்த ரோட்டில், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயனித்து வருகின்றன. பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலையில், குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி சார்பில் ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கியது. புதிதாக ரோடு அமைப்பதற்காக பழைய ரோடு தோண்டப்பட்டது. தொடர்ந்து புதிதாக ரோடு அமைக்காமல், ஒரு மாதமாக இழுபறியாகி வருகிறது. இதனால், இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. எனவே, ரோடு பணியை விரைந்து முடிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை