உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வங்கி கணக்கில் சம்பளம் பட்டுவாடா: கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., தேவை

வங்கி கணக்கில் சம்பளம் பட்டுவாடா: கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., தேவை

வால்பாறை:வால்பாறையில், எஸ்டேட் தொழிலாளர்களுக்கு வங்கி கணக்கில் சம்பளம் பட்டுவாடா செய்யும் நிலையில், கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., கொண்டு வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், 25 ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு எஸ்டேட்களில் பணியாற்றுகின்றனர். இதுதவிர, அசாம், ஜார்கண்ட், பீகார் போன்ற வெளிமாநிலத்தை சேர்ந்த, தொழிலாளர்களும் அதிகளவில் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு, மாதம் தோறும், 7 மற்றும், 10ம் தேதிகளில் வங்கி கணக்கில் சம்பளம் வழங்கப்படுகிறது. எஸ்டேட் தொழிலாளர்கள் வால்பாறை நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.இதுகுறித்து, எஸ்டேட் தொழிலாளர்கள் கூறியதாவது:வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக, வங்கி கணக்கில் சம்பளம் வழங்கபடுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நாட்களில், வங்கி ஏ.டி.எம்.,களுக்கு சென்றால் பணமும் இருப்பதில்லை. இதனால் அவதிக்குள்ளாகி வருகிறோம்.எனவே, தொழிலாளர்களின் நலன் கருதி, மாதம் தோறும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் நாட்களில், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சார்பில் எஸ்டேட் பகுதிகளுக்கு கூடுதல் நடமாடும் ஏ.டி.எம்., கொண்டுவர வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை