மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அலுவலருக்கு வாசல் வரை வந்து 'குட்பை'
06-Feb-2025
கோவை; பெண் குழந்தைகளுக்கான கல்வியை வலிமைப்படுத்தும் நோக்கில், உருவாக்கப்பட்டுள்ள சிலையை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று துவக்கி வைத்தனர். பெண் கல்வியை வலிமைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கான முயற்சியில் அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், கலெக்டர் அலுவலகம் எதிரில் ஸ்டேட் பாங்க் சாலையில், சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, புத்தகங்களை வரிசையாக அடுக்கி, அதன் மீது உலக உருண்டை இருப்பதை போலவும், அதில் உள்ள படிக்கட்டுகளில் பெண் குழந்தை ஏறுவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை, கலெக்டர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், பாஸ்போர்ட் அலுவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, அடிசியா டெவலப்பர்ஸ் நிறுவனர் மணிகண்டன் உடனிருந்தனர்.
06-Feb-2025