உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 2ல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 2ல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு வரும், 2ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், பி.காம்.,(சி.ஏ.,), பி.காம்.,(பி.ஏ.,), பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுடன் செயல்படுகிறது. தற்போது, பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டுள்ளன.மாணவர் சேர்க்கைக்கான, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தொடர்ந்து, கலந்தாய்வு வரும், 2ம் தேதி நடக்கிறது.கல்லுாரி முதல்வர் சுமதி கூறியதாவது:பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்,நடப்பாண்டு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு, ஆன்லைன் வாயிலாக கடந்த, 27 ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அந்த விண்ணப்பங்களில் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.தரவரிசைப்படி மாணவர்கள் கலந்தாய்வுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக அழைக்கப்பட உள்ளனர். மேலும், மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் கல்லுாரி இணையதளத்தில், www.gascpollachi.ac.inவெளியிடப்பட்டது.அதன்படி, ஷிப்ட்1ல் பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், பி.காம்.,(சி.ஏ.,) பி.காம்., (பி.ஏ.,), பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கான, 300 இடங்கள் உள்ளன. ஷிப்ட் 2ல் (மதியம்) பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் பி.காம்., பாடப்பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, 120 இடங்களுக்கான பொது கலந்தாய்வு வரும், 2ல் துவங்குகிறது.சிறப்பு பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், விளையாட்டு, என்.சி.சி., செக்யூட்ரி போர்ஸ் பிரிவுகளுக்கு வரும், 2 மற்றும், 3ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.ஷிப்ட் 1ல், பி.காம்.,(சி.ஏ.,), பி.காம்.,(பி.ஏ.,), பி.பி.ஏ., ஷிப்ட் 2ல், பி.காம்., பாடப்பிரிவுகளுக்கு, வரும், 4 மற்றும், 5ம் தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது.வரும், 6ம் தேதி ஷிப்ட் 1ல் பி.ஏ., (ஆங்கிலம்), வரும், 9ல் ஷிப்ட் 1ல், பி.எஸ்சி., (கணிதம்), ஷிப்ட் 2ல், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடக்கிறது.இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி