உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விபத்தில்லா தீபாவளி கொண்டாட அறிவுரை

விபத்தில்லா தீபாவளி கொண்டாட அறிவுரை

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு பகுதியில் தீயணைப்பு துறை சார்பில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கிணத்துக்கடவு முக்கிய பகுதிகளில், தீயணைப்பு துறை சார்பில் தீபாவளி பண்டிகையின் போது, விபத்து ஏற்படாத வகையில் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில், பஸ் ஸ்டாண்ட், காஸ் குடோன், பெட்ரோல் பங்க் அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது. அதிக சப்தம் கொண்ட வெடியை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். முதியவர்கள் அருகில் இருக்கும் போது பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது, பெரியவர்கள் உடனிருக்க வேண்டும். வெடிக்காத பட்டாசுகளை கைகளில் தொடக்கூடாது. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தீ காயம் மீது குளிர்ந்த நீர் ஊற்றிய பின், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், என, மக்களுக்கு அறிவுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி