உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மா மரங்களில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

மா மரங்களில் நோய் தாக்குதல் கட்டுப்படுத்த ஆலோசனை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில் உள்ள, மா மரங்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த, கிணத்துக்கடவு தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கி உள்ளது.கிணத்துக்கடவு பகுதியில், 210 ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி உள்ளது. இதில், பல்வேறு பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தத்துப்பூச்சி மற்றும் இலைப்பேன் தாக்குதல், கிணத்துக்கடவு வட்டாரத்தில் ஆங்காங்கே காணப்படுகிறது.இதை கட்டுப்படுத்த, இமிடாக்ளோப்பிரிட் அல்லது தாமீத்தாக்சாம் என்ற மருந்தை, அதிகாரிகள் ஆலோசனைப்படி தண்ணீரில் கலந்து இலை வழியாக தெளிக்க வேண்டும். இதன் வாயிலாக பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தலாம், என, தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி