உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சரக்குகளை ஏற்றும் முன் கவனம் டிரைவர், நடத்துனருக்கு அறிவுரை

 சரக்குகளை ஏற்றும் முன் கவனம் டிரைவர், நடத்துனருக்கு அறிவுரை

: பஸ்களில் பார்சல் ஏற்றும் முன் முழுமையான விபரம் தெரிந்து கொண்டு, ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு பஸ்களில் பான் மசாலா பொருட்கள் ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பயணிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. ஒசூர் - கிருஷ்ணகிரி வழித்தடத்தில் இயங்கி பஸ்களில் திடீர் பரிசோதனை நடத்தியபோது, பஸ் பார்சலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, டிரைவர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், 'பஸ்களில் பார்சல் ஏற்றும் முன் முழுமையான விபரம் தெரிந்து கொண்டு, ஏற்ற வேண்டும். தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும் என்பது, வழக்கமான நடைமுறை தான். டிரைவர், நடத்துனர் பிரச்னை தெரியாமல் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதால், அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது' என்றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !