உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் குரும்பல் உதிர்வு தடுக்க விவசாயிகளுக்கு அறிவுரை

தென்னையில் குரும்பல் உதிர்வு தடுக்க விவசாயிகளுக்கு அறிவுரை

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதிகளில் தென்னையில் குரும்பை உதிர்தலை தடுக்க, வேளாண் பல்கலை பேராசிரியர் ஆனந்தராஜா ஆலோசனை வழங்கியுள்ளார். கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில் தென்னை விவசாயம், 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. தென்னையில் பல்வேறு பூச்சி மற்றும் நோய் தாக்குதல் காணப்படுகிறது. இதில், தென்னையில் குறும்பை உதிர்வது மற்றும் காய் சிறியதாக இருப்பது உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளது. இதுகுறித்து, வேளாண் பல்கலைக்கழக பேராசிர ி யர் ஆனந்தராஜா கூறியதாவது: தென்னைக்கு முறையான நுண்ணூட்டம் மற்றும் பேரூட்டம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, ஐந்து வயதான தென்னை மரங்களுக்கு, ஆண்டுக்கு, ஒரு மரத்திற்கு, 1.3 கிலோ யூரியா, 2 கிலோ சூப்பர் பாஸ்போர்ட் மற்றும் 3.75 கிலோ பொட்டாஷ் உரத்தை, ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு பகுதியாகவும், டிசம்பர், ஜனவரி மாதங்களில் மற்றொரு பகுதியாக பிரித்து வழங்க வேண்டும். மேலும், 40 மில்லி தென்னை டானிக்கை, 160 மில்லி தண்ணீருடன் கலந்து, வேர் வாயிலாக செலுத்த வேண்டும். இதை செய்தால் தென்னை மரம் செழிப்பாகும். குரும்பல் உதிர்வு தவிர்க்கப்படும். இவ்வாறு, கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !