உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வலசுபாளையம் மந்தை மாரியம்மன், அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது.கிணத்துக்கடவு, வலசுபாளையம் மந்தை மாரியம்மன், அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த, 20ம் தேதி, நோன்பு சாட்டுதல் மற்றும் சிறப்பு பூஜையுடன் துவங்கியது.வரும், ஜூன், 2ம் தேதி, காலையில் காப்பு கட்டுதல், கம்பம் எடுத்து வந்து கங்கையில் வைத்தல் நடக்கிறது. இரவு, கம்பம் நடுதல் மற்றும் கோவில் பூவோடு எடுக்கப்படுகிறது. 3ம் தேதி, ஆபரண பெட்டி மற்றும் பால்குடம் எடுத்து வருதல், பூவோடு எடுத்தல், சக்தி கும்பம் அழைத்தல் நடக்கிறது.வரும், 4ம் தேதி, மாவிளக்கு எடுத்தல் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. இரவில், கம்பம் எடுக்கும் நிகழ்வு நடக்கிறது. 5ம் தேதி, அம்மன் திருவீதி உலா மற்றும் மஞ்சள் நீராடுதல், 6ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள், அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை