தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தையில் உடன்பாடு
வால்பாறை : வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் பேச்சு வார்த்தை நடந்தது. பாலசந்தர், ரஞ்சித் (உட்பிரியார்), திம்பையா (பி.பி.டி.சி.,), முரளிபடிக்கல் (பாரிஆக்ரோ), விஜயன் (பி.கே.டி.,) உள்ளிட்ட எஸ்டேட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொழிற்சங்கங்களின் சார்பில், அமீது (ஏ.டி.பி.,) சவுந்திரபாண்டியன், வினோத் (எல்.பி.எப்.,) கருப்பையா (ஐ.என்.டி.யு.சி.,), மோகன் (ஏ.ஐ.டி.யு.சி.,) உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பேச்சுவார்த்தையின் முடிவில், வாட்டர்பால் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, 10 சதவீதம் போனஸ் வழங்கவும், உட்பிரியார், பாரிஆக்ரோ, டாடா, பி.கே.டி., பி.பி.டி.சி., உள்ளிட்ட எஸ்டேட் தொழிலாளர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டது.தொழிற்சங்க தலைவர்கள் கூறுகையில், 'இந்த ஆண்டு தீபாவளி போனசாக, 16 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. வரும், 24ம் தேதிக்குள் அனைத்து எஸ்டேட் தொழிலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்ட போனஸ் வழங்கப்படும்,' என்றனர்.