உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் சுற்றுச்சூழல் விருதுகள்

வேளாண் சுற்றுச்சூழல் விருதுகள்

கோவை; இயற்கை வழி மற்றும் புதுப்பிக்கப்பட்ட வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த அமைப்பான அக்லிபெர்ட்டி, இயற்கை வழி வேளாண்மை சார்ந்து சிறப்பாக செயல்படுவோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது.கோவையில், 5வது ஆண்டு விருது வழங்கும் விழா நடந்தது. விழாவில் மறுமலர்ச்சி வேளாண்மை, உயிராற்றல் வேளாண்மை, பருவநிலை சார் வேளாண்மை, புதுப்பிக்கப்பட்ட வேளாண்மை குறித்து விவாதிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், வேளாண் சுற்றுச்சூழலில் சிறப்பாக செயல்பட்ட, லடாக் சுற்றுச்சூழல் மற்றும் லடாக் சங்கத்தின் முகமது டீன், இயற்கை விவசாயி யுவராஜ், டேவிட் ஹாடக் (அரக்கு காபி), மஹாராஷ்டிர விவசாயி அமல் கரோடி, பார்த்திபன், விஞ்ஞானி மஞ்சுளா ஜாட், ஆஞ்சநேயலு, வயநாடு சமூக சேவை சங்கம் ஆகியோருக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.கிருஷ்ணமூர்த்தி பன்னாட்டு வேளாண் மேம்பாட்டுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இன்ப சேவா தங்க தலைவர் மார்க்கண்டேயன், இயற்கை வழி சான்றிதழ் வழங்கும் இந்திய சங்கத்தின் தலைவர் ஸ்ரீரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ