ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரியில் வேளாண் திருவிழா ஆகா
கோவை: கோவை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் உள்ள, ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லுாரி சார்பில் இரண்டு நாள் வேளாண்மை திருவிழா நேற்று துவங்கியது.கண்காட்சியில் இடம் பெற்ற காங்கேயம் காளைகள் கண்காட்சி, அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக நாட்டு மாட்டு ரகங்களான மயிலை, செவலை, காரி வகைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றன.மாலையில் நடந்த நாட்டு ரக நாய்களின் கண்காட்சியில் சிப்பி பாறை, ராஜபாளையம், சந்தை கடை, கன்னி ரக நாய்கள் மக்களை கவர்ந்தன. ஆட்டுக்கிடாய்களின் கண்காட்சியும் ஆர்வத்தை துாண்டின. கிராமியக் கலை, குதிரை பந்தயம் போன்ற நிகழ்வுகளும் நடந்தன. இன்று ரேக்ளா பந்தயம்
இன்று, ரேக்ளா பந்தயம் நடக்கிறது. பொதுமக்கள் கண்டு மகிழலாம். வேளாண் திருவிழா துவக்க விழாவில், சக்தி இன்ஜினியரிங் கல்லுாரியின் தலைவர் தங்கவேலு, செயலாளர் தீபன், இணை செயலாளர் சீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.