உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அத்திக்கடவு 2ம்--- திட்டம் நிறைவேற்ற அ.தி.மு.க. வினர் வலியுறுத்தல்

அத்திக்கடவு 2ம்--- திட்டம் நிறைவேற்ற அ.தி.மு.க. வினர் வலியுறுத்தல்

அன்னுார்; அத்திக்கடவு இரண்டாம் திட்டத்திற்கு முன்னுரிமை அளிக்க முன்னாள் முதல்வர் பழனிசாமிடம், அ.தி.மு.க., வினர் வலியுறுத்தினர். திருப்பூர் மாவட்டம், அவிநாசிக்கு வந்த முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம், அ.தி.மு.க., வர்த்தக அணி மாநிலத் துணைத் தலைவர் அம்பாள் பழனிசாமி தலைமையில் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : அ.தி.மு.க., ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தால், கோவை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் பயன்பெற்றுள்ளன. எனினும் இதில் சில நூறு குளம், குட்டைகள் விடுபட்டுள்ளன. விடுபட்ட குளம், குட்டைகளுக்கான அத்திக்கடவு இரண்டாம் திட்டத்திற்கு அ.திம.க., ஆட்சி அமைந்த உடன் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், உள்ள விடுபட்டகுளம், குட்டைகளில் நீர் நிரப்ப வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் அன்னுார் ஒன்றிய செயலாளர்கள் சரவணன், சாய் செந்தில், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சுந்தரம், மாணவரணி மாவட்ட செயலாளர் கோகுல், பாசறை மாவட்ட செயலாளர் வசந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை