உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2026ல் ஆட்சி அமைய அ.தி.மு.க.வினர் வழிபாடு

2026ல் ஆட்சி அமைய அ.தி.மு.க.வினர் வழிபாடு

பொள்ளாச்சி; தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என, மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டி, பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாளபாளையம் மாரியம்மன் கோவிலில், அ.தி.மு.க. சார்பில் சிறப்பு வழிபாடு நடந்தது. எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தலைமை வகித்தார். தொடர்ந்து, சுவாமி தரிசனம் செய்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் தலைமையில், 10 ஆண்டு கால அ.தி.மு.க.வின் சாதனை திட்டங்கள், தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள், வியாபாரிகள் என, அனைத்து தரப்பு மக்கள் சந்தித்த இன்னல்கள் என, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது. குறிப்பாக, வீடுவீடாக சென்றும், பஸ் பயணியரிடமும் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது. கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் பாப்புதிருஞானசம்பந்தம், மாநில கைத்தறி பிரிவு பொருளாளர் மனோகரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சிங் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ