உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலக்காட்டில் அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு

பாலக்காட்டில் அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு, கூட்டுப்பாதை பகுதியில், புதிதாக கட்டப்பட்ட மாவட்ட அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தை, முன்னாள் அமைச்சர் வேலுமணி திறந்து வைத்தார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 200 பேருக்கு ஓணம் புத்தாடைகளை வழங்கினார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர். வேலுமணி பேசுகையில், “கேரள சட்டசபை, உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர்ந்து பங்கேற்கும். மக்களுக்கான தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கால திட்டங்களை அ.தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தும். தமிழகத்தில், அடுத்த ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியமைக்கும்,'' என்றார். கேரள மாநில செயலாளர் ஹரிபாபு, அவைத்தலைவர் மயில்சாமி, பாலக்காடு மாவட்ட செயலாளர் நசீர், இடுக்கி மாவட்ட செயலாளர் கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை