அ.தி.மு.க.,வினர் ரத்த தான முகாம்
கோவை; அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்பப்பிரிவு சார்பில், மாநிலம் முழுதும் ரத்தத்தின் ரத்தமே என்ற பெயரில் ரத்ததான முகாம் நேற்று நடந்தது.கோவையில், கோவை தெற்கு, வடக்கு, மாநகர் மாவட்டம் என பல்வேறு பகுதிகளிலும் முகாம் நடத்தப்பட்டது. இலவச மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன. குனியமுத்தூர் பகுதியில் நடந்த, ரத்த தான முகாமை, முன்னாள் அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார். தங்களது பகுதியில் நடந்த முகாம்களில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.