உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை நகராட்சியை கண்டித்து ஆக., 5ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

காரமடை நகராட்சியை கண்டித்து ஆக., 5ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

சென்னை: காரமடை நகராட்சியை கண்டித்து, வரும் 5ம் தேதி, அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: கோவை காரமடை நகராட்சி, சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து, நகராட்சிக்கு வருமான இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள மின் மயானம், பல மாதங்களாக செயல்படுவதில்லை.நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, தார் மற்றும் கான்கிரீட் சாலைகள், சாக்கடை கால்வாய்கள் தரமற்று அமைக்கப்பட்டுள்ளன. வீடு கட்டுவதற்கு அனுமதி வழங்குவதிலும், புதிய வரி விதிப்பிலும் பெருமளவு முறைகேடுகள் நடந்துள்ளன. சாக்கடைகள், தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. குடிநீர் விநியோகமும் முறையாக இல்லை. இதற்கு காரணமான காரமடை நகராட்சியையும், தி.மு.க., அரசையும் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், வரும் 5ம் தேதி காலை 10:00 மணிக்கு, காரமடை 'கார் ஸ்டாண்ட்' அருகில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. இதில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !