உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை வேளாண் பல்கலையில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

 கோவை வேளாண் பல்கலையில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 72வது அனைந்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. இதில், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் ராமகிருஷ்ணன் பேசியதாவது: பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத்திறனாளி கடன்கள் பெற்று, கடனுக்கான அசலை உரிய காலத்துக்குள் திருப்பி செலுத்துவோருக்கு, பூஜ்ஜிய சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. 2021--22 முதல் கடந்த அக்., 31 வரை, ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 657 பேருக்கு, ரூ.2075.25 கோடி கடன் வழங்கப்பட்டது. இக்கடன் தொகை, கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்ட மொத்த கடனில், 15.56 சதவீதம் ஆகும். சுய உதவிக்குழு கடன், ஆதரவற்ற விதவை கடன், நாட்டுப்புற கலைஞர்கள் கடன், சிறகுகள் திட்டத்தின் கீழ் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கடன்கள், டாம்கோ, தாட்கோ, டாப்செட்கோ ஆகிய கடன்களுக்கு, 2021--22 முதல், கடந்த அக். 31ம் தேதி வரை 60 ஆயிரத்து 495 பேருக்கு, ரூ.557.89 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு கடன், 2021- முதல் கடந்த அக்., 31ம் தேதி வரை கடன் வழங்க, மொத்த குறியீடு ரூ.437.50 கோடி. தற்போது வரை, ரூ.522 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்த குறியீட்டிற்கு 119.54 சதவீதமாகும். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ், 53 ஆயிரத்து 568 பேருக்கும், தமிழ் புதல்வர் திட்டங்களின் கீழ் 8,031 மாணவர்களுக்கும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 1,154 மாணவியருக்கும், கூட்டுறவு வங்கிகளில், ஜீரோ பேலன்ஸ்' கணக்குகள் துவங்கி, பயனாளிகள் மாதந்தோறும் நிதி உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை