அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை தேவை
வால்பாறை; மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.இதனால், மக்கள் எவ்வித அச்சமும் இன்றி மொபைல்போன் பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாக எளிய முறையில் பணம் செலுத்தி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.இந்நிலையில், வால்பாறை நகரில் உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பணம் செலுத்த வசதியாக 'பே டிஎம்' கொண்டுவரப்பட்டுள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் அமுதம் மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சிறப்பங்காடிகள் வாயிலாக, 18 ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது, ஆன்லைன் வாயிலாக பணத்தை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், வால்பாறை நகரை தவிர எஸ்டேட் பகுதியில் நெட்ஒர்க் பிரச்னையால் ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்தும் வசதியை நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, முதல் கட்டமாக நகரில் உள்ள கடைகளில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பிற கடைகளில் நெட்ஒர்க் பிரச்னை சரியான பின், நடைமுறைப்படுத்தப்படும்.இவ்வாறு, கூறினர்.