அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
கோவை; அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை கலெக்டர் அலுவலகம் அருகே, சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., -எச்.எம்.எஸ்., உட்பட, 11 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய, அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் (கோவை மாவட்டம்), பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், தொழிலாளர் விரோத புதிய சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.பின்னர், ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாகி ஆறுமுகம், எச்.எம்.எஸ்., ராஜாமணிஉள்ளிட்ட நிர்வாகிகள், கோரிக்கைகள் அடங்கிய மனுவை, மத்திய அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் விதமாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.