உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தை அமாவாசையை முன்னிட்டு அன்னதானம்

தை அமாவாசையை முன்னிட்டு அன்னதானம்

கோவை;குறிச்சி குளம் எதிரில் உள்ள ஹரிஹர புத்திரன் ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மாள் நித்திய அன்னதான சேவா கமிட்டி சார்பில், தை அமாவாசையை முன்னிட்டு, மஹா அன்னதானம் கோவில் வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை, ஸ்ரீ அய்யனார் ஆதினம் குருமகா சந்நிதானம் ஹரிஹர ஸ்ரீ ஸ்ரீனிவாச சுவாமிகள் துவங்கி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஸ்ரீ அய்யனார் சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மாள் நித்ய அன்னதான சேவா சார்பில் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை