முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மேட்டுப்பாளையம்; 1982ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு காரமடையில் நடைபெற்றது. பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா பாலிடெக்னிக் கல்லூரியில் 1972--1982ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு காரமடையில் நடைபெற்றது. இதில் 69 மாணவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் பேசி மகிழ்ந்தனர். இவர்களில் பலரும் போலீஸ், மின்சாரத்துறை, உள்ளாட்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியவர்கள். இதுகுறித்து முன்னாள் மாணவர் ஞானசேகரன் பேசுகையில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா எங்களுக்கு போதித்தது ஒழுக்கம். இதன் வாயிலாக தான் நாங்கள் பல்வேறு நன்மைகளை வாழ்க்கையில் பெற்று வெற்றி பெற்றோம். இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில், நிறுவனங்களில் உயர் பொறுப்பில் உள்ள நண்பர்களை பார்த்ததும், மகிழ்ச்சியளிக்கிறது. நமக்கு கிடைக்காதது நம் நண்பர்களுக்கு கிடைத்திருப்பது பெருமை, என்றார்.--