துன்பத்தை போக்கும் மனப்பான்மை அவசியம்
மேட்டுப்பாளையம்; 'சக மனிதர்களின் துன்பத்தை போக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம்' என பாரதியார் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறைத்தலைவர் சங்கமித்ரா, கல்லூரி விழாவில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.காரமடையில் உள்ள டாக்டர். ஆர். வி. கலை, அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான புத்தாக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் ரூபா வரவேற்றார்.கோவை பாரதியார் பல்கலை பொருளாதார துறைத்தலைவர் சங்கமித்ரா பேசுகையில், ''தன்னம்பிக்கை கொண்டு விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றிக்கனிகளை பறிக்கலாம். ஆசிரியர்களை வழிகாட்டியாக கொண்டு வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, வெற்றி சிகரத்தை அடைந்து, எல்லாவற்றிலும் ஒரு தனித்துவத்தை பெற வேண்டும். சக மனிதர்களின் துன்பத்தை போக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். நாம் பேசும் தமிழ் என்பது நம் அடையாளம். அத்தகைய மொழியின் வளர்ச்சிக்கு நாம் பாடுபடுதல் நலம்'' என்றார்.இந்நிகழ்ச்சியில் கல்லுாரியின் நிர்வாக மேலாளர் மனோகரன், துணை முதல்வர்கள் சண்முகப்பிரியா, தேவப்பிரியா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.