உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.11 லட்சம் மோசடி; ஆந்திர நபர் கைது

ரூ.11 லட்சம் மோசடி; ஆந்திர நபர் கைது

கோவை; பகுதி நேர வேலை இருப்பதாக கூறி பெண்ணிடம், ரூ.11 லட்சம் மோசடி செய்த நபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.கோவையை சேரந்த, 36 வயது பெண்மணி ஒருவர், பகுதி நேர வேலை தேடிக்கொண்டிருந்தார். அப்போது அவரது, வாட்ஸ் ஆப் எண்ணுக்கு தகவல் ஒன்று வந்தது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.அதில் கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பு வழியாக தொடர்பு கொண்ட போது, டெலிகிராம் முகவரி வாயிலாக டாஸ்க்குகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. துவக்கத்தில் சிறிது பணம் கிடைத்தது. இதையடுத்து மேலும் லாபம் பெற முதலீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது.அவர் பல கட்டங்களாக ரூ.11 லட்சத்தை முதலீடு செய்தார். அவரது லாபம் வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், லாப பணத்தை எடுக்க முடியவில்லை. கூடுதலாக தொகை முதலீடு செய்தால் பணத்தை எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணையில் ஆந்திர மாநிலம் காக்குமானு, கொண்டபட்டுருவை சேர்ந்த வூட்லா ரவி தேஜா, 34 என்பவர் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை