அபாய நிலையில் அங்கன்வாடி கட்டடங்கள்
அன்னுார்; 'அபாய நிலையில் அங்கன்வாடி கட்டிடங்கள் உள்ளன,' என இ. கம்யூ., ஒன்றிய மாநாட்டில் புகார் தெரிவிக்கப்பட்டது.இந்திய கம்யூ. 13 வது அன்னுார் ஒன்றிய மாநாடு வடக்கலூரில் நேற்று நடந்தது. மாநாட்டில், அபாய நிலையில் உள்ள நாகமாபுதூர், குமாரபாளையம், அங்கன்வாடி கட்டிடங்களை அகற்ற வேண்டும். அன்னுார் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.நூற்பாலைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பும், அரசு நிர்ணயித்த சம்பளமும் வழங்க வேண்டும்.தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் விநியோகிக்க வேண்டும். சொந்த இடமும், வீடும் இல்லாத ஏழை, எளியோருக்கு, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஒன்றிய செயலாளராக செல்வராஜ், துணைச் செயலாளராக ஈஸ்வரன், பொருளாளராக கலைச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் மாவட்ட பொருளாளர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.