உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையில் உணவு தேடும் கால்நடைகள்

குப்பையில் உணவு தேடும் கால்நடைகள்

வால்பாறை, ; குப்பைக்கழிவுகளில் உணவு தேடும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சுற்றுலாநகரமான வால்பாறையில் கால்நடைகள் அதிக அளவில் ரோட்டில் நடமாடுகின்றன. இங்குள்ள வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகள் நாள் தோறும் எடுத்துச்செல்லப்பட்டு, ஸ்டேன்மோர் ரோட்டில் உள்ள திறந்தவெளிக்குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன.இந்நிலையில், வால்பாறையில் பொங்கல் பண்டிகையொட்டி தொடர் விடுமுறையால் பல்வேறு இடங்களில் திறந்த வெளியில் குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.பெரும்பாலான இடங்களில் துாய்மைப்பணியாளர்கள் வீடு மற்றும் கடைகளில் சேகரிக்கப்பட்ட குப்பைக்கழிவுகளை நேற்று வரை எடுத்து செல்லவில்லை.இதனால், திறந்த வெளில் பாலித்தீன் கழிவுகளுடன் கிடக்கும் குப்பைக்கழிவுகளை, கால்நடைகள் உணவாக உட்கொள்கின்றன. இதனால், அவற்றின் ஜீரணமண்டலம் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பும் ஏற்ப்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகரில் பல இடங்களில் குப்பை அள்ளப்படாமல் தேங்கி கிடக்கின்றன. ஸ்டேன்மோர் குப்பைக்கிடங்களில் திறந்த வெளியில் குப்பைக்கழிவுகள் வீசப்படுவதால், அதை உண்ணும் கால்நடைகளுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.எனவே துாய்மை பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பையை, உடனுக்குடன் நகராட்சி பணியாளர்கள் வாகனத்தில் எடுத்துச்செல்ல வேண்டும்.வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், காய்ச்சல் பரவில் அதிகரித்துள்ள நிலையில் நகர் பகுதி முழுவதும் கொசுமருந்து தெளிக்க வேண்டும். குப்பைக்கிடங்களில் திறந்த வெளியில் குப்பை கொட்டப்படுவதை, நகராட்சி அதிகாரிகள் தடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை