அண்ணா பல்கலை பேட்மின்டன் போட்டி: இரு பிரிவிலும் வென்றது கே.சி.டி.,
கோவை : அண்ணா பல்கலைக்கு உட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளுக்கு இடையேயான பேட்மின்டன் போட்டி இரு பிரிவுகளிலும், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, அபார வெற்றி பெற்றது. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் கடந்த, 20ம் தேதி முதல் அண்ணா பல்கலை மண்டல மையம், எஸ்.என்.எஸ்., கல்லுாரி உள்ளிட்ட இடங்களில், நடந்து வருகின்றன.பேட்மின்டன், டென்னிஸ், கூடைப்பந்து, வாலிபால், டேபிள் டென்னிஸ் என, 19 வகையான போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்படுகின்றன.பேட்மின்டன் போட்டிகள் நடந்த நிலையில் ஆண்கள் பிரிவில், 13 அணிகளும், பெண்கள் பிரிவில், 11 அணிகளும் பங்கேற்றன.பல்வேறு சுற்றுகளையடுத்து, ஆண்களுக்கான அரையிறுதி போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது. இரண்டாவது அரையிறுதியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்றது.இறுதிப்போட்டியில், குமரகுரு கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது. எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், அரசு தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது.பெண்களுக்கான அரையிறுதியில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணியையும், இரண்டாம் அரையிறுதியில் குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியை வென்றது.இறுதிப்போட்டியில், குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி அணியை வென்று, முதலிடம் பிடித்தது.ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி அணி, 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.என்.எஸ்., இன்ஜி., கல்லுாரி அணியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது.