கோடைகால இலவச பயிற்சி அண்ணா பல்கலை அழைப்பு
கோவை : அண்ணா பல்கலை மண்டல மையத்தில், இன்று துவங்கும் கோடை கால இலவச பயிற்சி முகாமில் பங்கேற்க, இரு பாலரும் வரவேற்கப்படுகின்றனர்.அண்ணா பல்கலை மண்டல மைய, உடற்கல்வித் துறை சார்பில், இலவச கோடை கால பயிற்சி முகாம் இன்று முதல் வரும், 17ம் தேதி வரை நடக்கிறது. கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், கபடி, யோகா, கூடைப்பந்து ஆகிய ஆறு விளையாட்டுகளுக்கு, பயிற்சி அளிக்கப்படுகிறது.காலை, 6:00 முதல் 8:00 மணி வரையும், மாலை, 4:30 முதல் 6:30 மணி வரையும் இப்பயிற்சி வழங்கப்படும் நிலையில், 10 முதல், 18 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். விளையாட்டு சங்கத்தினர், சிறந்த பயிற்சியாளர்கள் கொண்டு வழங்கப்படும் இப்பயிற்சியில் ஒவ்வொரு விளையாட்டிலும், 25 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர்.முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 94422 66815, 93603 98445, 97897 63459 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, அண்ணா பல்கலை மண்டல மையம் தெரிவித்துள்ளது.