மேலும் செய்திகள்
பல்கலை ஹேண்ட்பால் ராமகிருஷ்ணா அணி வெற்றி
01-Oct-2025
பெ.நா.பாளையம்:துடியலூர் அருகே வட்டமலை பாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் அண்ணா பல்கலை மண்டல அளவிலான பூப்பந்து போட்டி நடந்தது. பெண்கள் பிரிவில் முதல் அரை இறுதியில் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி, குமரகுரு இன்ஜினியரிங் கல்லூரி அணியை வென்றது. இரண்டாவது அரையறுதி போட்டியில் அரசு பொறியியல் கல்லூரி அணி, எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி, அரசு பொறியியல் கல்லூரியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இரண்டாம் இடத்தை அரசு பொறியியல் கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை குமரகுரு பொறியியல் கல்லூரி அணியும் வென்றது. ஆண்கள் பிரிவில் முதல் அரை இறுதியில், எஸ்.என்.எஸ். பொறியியல் கல்லூரி, ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவது அரை இறுதியில் குமரகுரு பொறியியல் கல்லூரி, அரசு இன்ஜினியரிங் கல்லூரி அணியை வென்று, இறுதி சுற்றில் விளையாட தகுதி பெற்றது. இறுதியில் குமரகுரு பொறியியல் கல்லூரி அணி, எஸ்.என்.எஸ். கல்லூரியை வென்று கோப்பையை தட்டி சென்றது. மூன்றாம் இடத்தை ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி அணி வென்றது.
01-Oct-2025