உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மான்செஸ்டர் பள்ளியில் ஆண்டு விழா குதுாகலம்

 மான்செஸ்டர் பள்ளியில் ஆண்டு விழா குதுாகலம்

கோவை: மான்செஸ்டர் சர்வதேச பள்ளியில், 'இந்தியாவை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில், ஆண்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர் கே.பி.ஆர். குழுமத் தலைவர் ராமசாமி கல்வியின் முக்கியத்துவத்தை, தனது வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையாளர் தினேஷ் பங்கார்கர் இந்தியாவின் பாரம்பரியம், பண்பாடு மரபுகளை மதிப்பது, காப்பதன் அவசியம் குறித்து பேசினார். உச்சநீதிமன்ற வழக்கறிஞர் தெய்வேந்திரன், மாணவர்களிடம் தன்னம்பிக்கை உரையாற்றினார். மாணவர்கள், இந்தியாவின் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நவீன மற்றும் நாட்டுப்புற நடனங்கள், இனிமையான பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தினர். பள்ளித் தலைவர் மூர்த்தி, தாளாளர் பிரியா, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என, 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை