உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

பள்ளிகளில் ஆண்டுவிழா கொண்டாட்டம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் ஆண்டு விழா நடந்தது.பொள்ளாச்சி, ரமணமுதலிபுதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. தலைமையாசிரியர் அழகேஸ்வரி வரவேற்றார். உதவி ஆசிரியர் கலைச்செல்வி ஆண்டறிக்கை வாசித்தார். கல்வியின் அவசியம் குறித்து முன்னாள் மாணவர் சுப்ரமணியம் பேசினார்.பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், முன்னாள் மாணவர்கள் சார்பில், ஸ்டீல் வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ஆனந்தன், மகாலிங்கம், தனபாக்கியம், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.* ஜமீன்ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், நுாற்றாண்டு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா நடந்தது. ஊத்துக்குளி ஜமீன்தார் அருண்குமார் காளிங்கராயர் விழாவை துவக்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி தலைமை வகித்தார். துணை தலைவர் அபுதாஹீர், தலைமையாசிரியர் ஜோதிமணி ஆகியோர், முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகளை வழங்கினர். கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.* ஜமீன் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கீதாராணி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.* பணிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டு விழாவில், தலைமையாசிரியர் மலர்விழி தலைமை வகித்தார். நாட்டுப்புறப்பாடல்களுக்கு மாணவர்கள் நடனமாடி அசத்தினர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பூமி வெப்பமாதல் குறித்து விளக்கப்பட்டது. வகுப்பு ஆசிரியர் சுமதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஸ்ரீதேவி, துணை தலைவர் அங்காத்தாள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ