உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாகமாதா கோவிலில் ஆண்டு விழா

நாகமாதா கோவிலில் ஆண்டு விழா

சூலுார்: சூலுார் சக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோவிலில், ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா நடந்தது.சூலுார் அடுத்த ராயர் தோட்டத்தில் உள்ள சக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 19வது ஆண்டு விழா மற்றும் பொங்கல் விழா கடந்த, 16ம் தேதி காலை விநாயகர் பூஜையுடன் துவங்கியது. 17ம் தேதி கொடியேற்றம் நடந்தது.தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை, பஜனை நடந்தன. ஆண்டு விழாவை ஒட்டி நடந்த விளக்கு பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனர். பெண்கள் பொங்கல் வைத்து நேர்த்தி கடன் செலுத்தினர். மதியம் அன்னதானம், திருவீதி உலா நடந்தன. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை