உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்

எதிர்பார்ப்பு!: தீபாவளி ஷாப்பிங் நேரம் நீட்டிக்க வேண்டுகோள்

கோவை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இரவு 1:00 மணி வரை அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். அதற்கேற்ப, இரவு சிறப்பு பஸ் சேவையும் வேண்டும் என்கின்றனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவை மாநகரிலுள்ள ஜவுளிகடைகள், நகைக்கடைகள், மொத்த வியாபார பல சரக்கு கடைகள் மற்றும் இதர வியாபார நிறுவனங்களில், பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் அலைமோதி வருகின்றனர்.கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, ஆயிரக்கணக்கான போலீசார் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நெரிசலை பயன்படுத்தி, மர்ம ஆசாமிகள், திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் உஷாராக இருக்க, ஒலி பெருக்கி வாயிலாக போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர். சாதாரண உடையிலும், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வழக்கமான நாட்களில் இரவு 11:00 மணி வரை, கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருப்பதால், குறிப்பிட்ட நேரத்திற்குள் கடையை அடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர், தங்கள் அன்றாட அலுவலக பணி முடிந்த பிறகு, இரவு நேரத்தில், கடைக்கு வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், அவசரத்தில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. வியாபாரிகளும் இரவு 11:00 மணிக்குள் கடைகளை அடைக்க முடிவதில்லை. எனவே தீபாவளியை முன்னிட்டு, வியாபாரிகள், பொதுமக்கள் வசதிக்காக கடைகளில் வியாபாரம் செய்யும் நேரத்தை, காவல்துறை அதிகரிக்க வேண்டும் என்று, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

சிறப்பு பஸ் இயக்க வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு , மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.கணேசன் கூறியதாவது: வியாபார நிறுவனங்கள், 24 மணி நேரமும் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், போலீசார் அனுமதிப்பது இல்லை. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, வியாபார நிறுவனங்கள் இரவு ஒரு மணி வரை செயல்பட, மாநகர போலீஸ் கமிஷனர் அனுமதி அளிக்க வேண்டும். பொதுமக்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு, வீடு திரும்புதற்கு வசதியாக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு, கணேசன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

kumar
அக் 20, 2024 20:32

இந்து மக்களே , தீபாவளியை கொண்டாடும் நேரத்தை அரசு கட்டுப்படுத்துகிறதே , அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவீர்களா ? புது துணிகளை உடுத்து எந்த பண்டிகையை கொண்டாடப் போகிறீர்கள் ? உங்கள் மத நம்பிக்கைகளை , அடையாளங்களை, கொண்டாட்டங்களை இழந்து விட்டு எதற்காக புது ஆடைகள் ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை