உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குப்பை கொட்டுவதை எதிர்த்து மாசாணியம்மனிடம் முறையீடு

 குப்பை கொட்டுவதை எதிர்த்து மாசாணியம்மனிடம் முறையீடு

பொள்ளாச்சி: திருப்பூர் மாநகராட்சி குப்பை கொட்டுவதை எதிர்த்து வரும் போராட்டக் குழுவினர், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மிளகாய் அரைத்து நேற்று வழிபாடு செய்தனர். திருப்பூர் அருகே இடுவாய் ஊராட்சி, சின்னிகாளிபாளையத்தில், மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பையை வகை பிரித்து, திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, இடுவாய், 63 வேலம்பாளையம், ஆறுமுத்தாம்பாளையம் மற்றும் கரைப்புதுார் கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்ட குழு அமைத்து போராடி வருகின்றனர். போராட்ட குழுவினர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடர்ந்துள்ளனர். மறியல், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம், கிராம சபை புறக்கணிப்பு என, பல்வேறு நிலைகளில், போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டாலும், தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிகாட்டி வருகின்றனர். அந்த வரிசையில், போராட்ட குழுவை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று, கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், மிளகாய் அரைத்து, அம்மனிடம் முறையீடு செய்து வழிபாடு நடத்தினர். போராட்டக்குழுவினர் கூறுகையில், 'இனி அரசை, அதிகாரிகளை நம்பி பலனில்லை என்பதால், தெய்வத்தை நாடி கோவிலுக்கு வந்துள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை