| ADDED : நவ 27, 2025 02:33 AM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ.,) சார்பில் 'லீக்' நுழைவுக்கான 'நாக் அவுட்' தகுதிப்போட்டி அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கான நுழைவு விண்ணப்பங்கள் ஆவாரம்பாளையம் ரோடு, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள சி.டி.சி.ஏ., அலுவலகத்தில் இன்று முதல் டிச., 1ம் தேதி வரை வழங்கப்படுகிறது. காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை டிச., 5 முதல், 9ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, சங்கத்தின் இணை செயலாளர் மகாலிங்கம் என்பவரை, 97877 40390 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். அதேபோல், 12, 14, 16 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும் வரும் டிச., மற்றும் ஜன., மாதங்களில் நடக்கிறது. இதற்கான, நுழைவு விண்ணப்பங்களில் பள்ளி தலைமையாசிரியர், முதல்வர்கள் கையொப்பம் பெறுவதுடன், பிறப்பு சான்றிதழ் நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை மதியம், 1:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு, இணை செயலாளர் சுரேஷ்குமார் என்பவரை, 80729 48889 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.