உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்

 பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் நியமனம்

அன்னூர்: பா.ஜ.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக பா.ஜ. மாநில செயற்குழு உறுப்பினராக, கோவை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்' என தெரிவித்துள்ளார். பா.ஜ.அன்னூர் வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை: அன்னூர் வடக்கு ஒன்றியத் தலைவர்களாக, அமைப்பு சாரா பிரிவுக்கு மூர்த்தி, ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவுக்கு தணிகாசலம், பிரசார பிரிவுக்கு சிவக்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவுக்கு ராஜேந்திரன், சமூக ஊடகப்பிரிவுக்கு விக்னேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு ஆறுச்சாமி, விருந்தோம்பல் பிரிவுக்கு ரமேஷ் குமார், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பிரிவுக்கு லோகநாதன், விளையாட்டு பிரிவுக்கு ரங்கநாதன் ஆகியோர், கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து ஒப்புதல் உடன் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ