மேலும் செய்திகள்
மாதா கோவில் தேர்பவனி
26-May-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தையாக லாரன்ஸ் அடிகளார் நியமிக்கப்பட்டார்.கிறிஸ்துவ கத்தோலிக்க திருச்சபையின் தேவாலயங்களில் பணியாற்றும் பங்கு தந்தையர்களின் பணியிட மாற்றம், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். அதன்படி, பொள்ளாச்சி வட்டார முதன்மை குருவாக பொறுப்பு வகித்த பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலய பங்குதந்தை ஜேக்கப் அடிகளார், பொள்ளாச்சியில் இருந்து மாற்றப்பட்டு கோவை மறை மாவட்டம் சூலுார் புனித சகாய அன்னை ஆலயத்தில் புதிய பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார்.பொள்ளாச்சி புனித லுார்து அன்னை ஆலயத்துக்கு புதிய பங்குதந்தையாக கோவை மயிலேறிபாளையம் நல்லாயன் குருத்துவ கல்லுாரி பேராசிரியர் அருட்தந்தை லாரன்ஸ் அடிகளார் நியமிக்கப்பட்டார். முன்னாள் பங்கு தந்தையை வழியனுப்பும் நிகழ்வும், புதிய பங்கு தந்தை வரவேற்பு நிகழ்வும் நடந்தது. அதில், பொள்ளாச்சி வட்டார முதன்மை குருவாக பொறுப்பேற்ற, வால்பாறை துாய இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை ஜெகன் ஆண்டனி அடிகளார் மற்றும் புனித லுார்து அன்னை ஆலய பங்கு தந்தை லாரன்ஸ் அடிகளார் பணி சிறக்க, கத்தோலிக்க கிறிஸ்துவ மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
26-May-2025