உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் பாராட்டு

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் பாராட்டு

அன்னுார்; பள்ளி நிர்வாகத்துடன், பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்,' என பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.காட்டம்பட்டி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில் தலைமை ஆசிரியர் பிரபாகர் தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில், பெற்றோர், தங்கள் குழந்தைகள் நன்கு படிக்க, பள்ளி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு உரிய அறிவுரைகள் தெரிவித்து பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.மாணவருக்கு தேவையான சான்றுகளை 'இ சேவை' மையத்தில் பெற்று தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தேர்வு காலங்களில் அருகில் ஒலிபெருக்கி சத்தமாக, கற்றலுக்கு இடையூறாக இருந்தால் அந்த நிலையை மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பின் தங்கிய பாடங்களில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டால் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்,' என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.கடந்த ஆண்டு 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்காக, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ