உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் சார்பாக 5வது இலக்கியக் கூட்டம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேட்டுப்பாளையம் தமிழ் சங்கத்தின் சார்பாக 5வது இலக்கிய கூட்டம் மற்றும் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ் சங்க இயக்க செயலாளர் ஜெயராம் வரவேற்புரை வழங்கினார். தலைவர் சோலைமலை, அறக்கட்டளை தலைவர் ராமசாமி ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சீதா லட்சுமி, கவுன்சிலர் அனிஷா, பெற்ற ஆசிரியர் கழகத் தலைவர் பாட்ஷா, மேலாண்மை குழு தலைவி அனிஷ் பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சி தலைவர் மெஹரிபா பர்வின், துணைத் தலைவர் அருள் வடிவு ஆகியோர் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றவர்களை பாராட்டி கவுரவித்தனர். அதன்படி வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சாக்ரடீஸ், மூலத்துறை நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமுருகன், பெட்டதாபுரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்தகுமார், கண்ணார் பாளையம் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா ஆகியோர் பாராட்டுகளை பெற்றனர். இலக்கியமும் இளைய தலைமுறைகளும் என்ற தலைப்பில் மைதிலி ரவிச்சந்திரன் சிறப்புரை ஆற்றினார். முன்னாள் தலைவர் தாமோதரன் நன்றியுரை வழங்கினார்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை