உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அர்ஜூன் சம்பத் மகன் ஜாமினில் விடுவிப்பு

அர்ஜூன் சம்பத் மகன் ஜாமினில் விடுவிப்பு

கோவை : ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். கோவையில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலுக்கு, மிரட்டல் விடுத்து பேசியதாக, அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனு கோவை கோர்ட்டில் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டதால் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஐகோர்ட் நிபந்தனை ஜாமின் அளித்ததை தொடர்ந்து, கோவை ஜே.எம்:3, கோர்ட்டில், இரு நபர் ஜாமின்தாரர், உத்தரவாத ஆவணங்களை அளித்தனர். இதையடுத்து, கோவை சிறையிலிருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி