கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு
அன்னுார்; அன்னுார் கோர்ட்டில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அன்னுாரில், சத்தி ரோட்டில், ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கோர்ட் செயல்படுகிறது. திருநெல்வேலியில் மூன்று நாட்களுக்கு முன்பு கோர்ட் வாசலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்து இருந்தது. பல்வேறு கேள்விகள் எழுப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து கோர்ட்டுகளிலும் போலீஸ் பாதுகாப்பு போட அறிவுறுத்தப்பட்டது. இதன்படி அன்னுாரில் உள்ள கோர்ட்டில் நேற்று எஸ்.ஐ., செந்தில் குமார் தலைமையில் துப்பாக்கி ஏந்திய மூன்று போலீசார் காலை முதல் இரவு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.