மேலும் செய்திகள்
சகோதயா பள்ளிகளுக்கு பேட்மின்டன் போட்டி
15-Oct-2025
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஏ.ஆர்.பி. இன்டர்நேஷனல் பள்ளி மாணவ, மாணவியர் கோவை மற்றும் திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கு இடையே நடந்த, சிலம்பம், கைப்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். சி.பி.எஸ்.இ. பள்ளிகளை ஒன்றிணைத்து, கோவை, திருப்பூர் சகோதயா கூட்டமைப்புகள் செயல்படுகின்றன. அவ்வகையில், சமீபத்தில், திருப்பூர் சகோதயா பள்ளிகள் இடையே சிலம்பம் போட்டி நடந்தது. இப்போட்டியில், பொள்ளாச்சி ஏ.ஆர்.பி. மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். மாணவி வர்ஷா முதலிடமும், மாணவர் மோனிக் இரண்டாமிடமும் பிடித்தனர். மேலும், 16 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட கைப்பந்து போட்டியில், ஏ.ஆர்.பி. பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது. கோவை சகோதயா பள்ளிகள் இடையிலான ஹாக்கி போட்டியில் பங்கேற்ற இப்பள்ளி அணி, நான்காமிடம் பிடித்தது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சுப்ரமணியம், செயலாளர் தமிழ்செல்வன், நிர்வாகிகள் மகேஸ்வரி, தங்கமணி, பள்ளி இயக்குநர் அரசு பெரியசாமி வாழ்த்தினர்.
15-Oct-2025