வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Dont be archaic. Now there are machines. Technology has developed. UPEN YOUR EYES, PUT THE BHARATH FIRST.
திருப்புவனம் : திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், லாடனேந்தல், கானுார் உள்ளிட்ட பகுதிகளில், ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் இருந்து 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் பறிப்பு நடைபெறுகிறது.திருப்புவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிட்டங்கிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு கிட்டங்கியிலும், லட்சக்கணக்கில் தேங்காய்கள் உறிப்பதற்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக, தேங்காய் உறிக்க வத்திராயிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வருவது வழக்கம், இரும்பு கம்பிகளின் ஒரு முனையை பயன்படுத்தி தேங்காய் உறிப்பர். நாள் ஒன்றுக்கு ஒரு நபர் 1,000 முதல் 1,500 தேங்காய் வரை உறிப்பது வழக்கம். தற்போது திருப்புவனத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தேங்காய் உறிக்கும் தொழிலாளர்கள் வந்துள்ளனர். தேங்காய் உறிப்பதற்கு வேல் போன்ற அமைப்பு கொண்ட கம்பியை பயன்படுத்தி வேகமாக உறிக்கின்றனர். குடும்பத்துடன் வந்து தங்கியுள்ள இவர்கள், நாள் ஒன்றுக்கு, 2,000 காய்கள் வரை உறிக்கின்றனர்.ஆந்திராவிலிருந்து வந்துள்ள ரமேஷ் கூறுகையில், ''ஆந்திராவில், இந்தாண்டு தேங்காய் விளைச்சல் இல்லாததால் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே, தமிழகம் வந்துள்ளோம்,'' என்றார்.இதுபோல, பொள்ளாச்சி, கம்பம் பள்ளத்தாக்கு போன்ற பல பகுதிகளிலும், ஆந்திர தொழிலாளர்கள் வந்துள்ளனர். அவர்கள், தமிழக தொழிலாளர்களை விட வேகமாக உறிப்பதால், அதிகமாக சம்பாதிக்கின்றனர்.
Dont be archaic. Now there are machines. Technology has developed. UPEN YOUR EYES, PUT THE BHARATH FIRST.