மேலும் செய்திகள்
குறுமைய அளவிலான கோ-கோ பள்ளி மாணவர்கள் அசத்தல்
25-Jul-2025
கோவை; கோவை மாவட்ட தெற்கு குறுமைய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி, குனியமுத்துார் எஸ்.ஆர்.வி., பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14 வயதுக்குட்பட்ட மாணவர் மற்றும் மாணவியருக்கான(இரட்டையர் பிரிவு) போட்டியில், ஆஷ்ரம் பள்ளி முதலிடத்தையும், டி.வி.எஸ்.எம்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில், ஆஷ்ரம் பள்ளி முதலிடத்தையும், ஈக்விடாஸ் பள்ளி இரண்டாம் இடத்தையும், மாணவியர் பிரிவில் ஆஷ்ரம் பள்ளி முதலிடத்தையும், டி.வி.எஸ்.எம்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. 19 வயதுக்குட்பட்ட மாணவர் மற்றும் மாணவியர் பிரிவுகளில், ஆஷ்ரம் பள்ளி முதலிடத்தையும், டி.வி.எஸ்.எம்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் மாணவியர்(தனிநபர்) பிரிவில் ஆஷ்ரம் பள்ளி முதலிடத்தையும், டி.வி.எஸ்.எம்., பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஆஷ்ரம், ஈக்விடாஸ் ஆகியன முதல் இரு இடங்களையும், மாணவியர் பிரிவில் ஆஷ்ரம், டி.வி.எஸ்.எம்., பள்ளிகள், முதல் இரு இடங்களையும் தட்டிச்சென்றன. 19 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் ஆஷ்ரம், ஈக்விடாஸ் பள்ளிகளும், மாணவியர் பிரிவில் ஆஷ்ரம், டி.வி.எஸ்.எம்., பள்ளிகளும் முதல் இரு இடங்களை தட்டிச்சென்றன. அனைத்து பிரிவுகளிலும் முதல் பரிசு வென்ற, ஆஷ்ரம் பள்ளி மாணவ, மாணவியரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
25-Jul-2025