உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

ஸ்ரீ பண்ணாரி மாரியம்மனுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

கோவை: காட்டூர் காளப்பன் லே அவுட்டில் அமைந்துள்ள, ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.காலை 7:00 மணிக்கு, மங்கள இசை முழங்க சோமகும்ப பூஜை, சூரியபூஜைகளை தொடர்ந்து, பூர்ணாஹூதி நிறைவடைந்து யாகசாலையிலிருந்து கும்பங்கள் கோபுரகலசங்களுக்கு எழுந்தருளப்பட்டன.அங்கு வேதவிற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தங்களை கோபுரகலசத்தின் மீதும், சுவாமிகளின் மீதும் ஊற்றி, அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை நிறைவு செய்தனர். திரளான பக்தர்கள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை