உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை அரசு மருத்துவமனையில் அசாம் வாலிபர் தற்கொலை

கோவை அரசு மருத்துவமனையில் அசாம் வாலிபர் தற்கொலை

கோவை:கோவை அரசு மருத்துவமனையில், அசாம் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே வடலுாரில் உள்ள சுகுணா சிக்கன் நிறுவனத்தில், அசாம் மாநிலம், சுனித்பூரை சேர்ந்த துப்பில் வரலா, 22, தங்கியிருந்து வேலை செய்து வந்தார். தலைவலியால் அவதிப்பட்ட இவர், உடுமலை அரசு மருத்துவமனைக்கு சென்று, முதலுதவி பெற்று திரும்பினார். தொடர்ந்து தலைவலி ஏற்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதித்த டாக்டர்கள், 'தலையில் எந்த பிரச்னையும் இல்லை' எனக்கூறி, சில மாத்திரைகள் எழுதி கொடுத்தனர். மடத்துக்குளத்தில் தங்கியிருந்த அறைக்கு திரும்பியவர், நேற்று முன்தினம் மாலை, மீண்டும் தலைவலி ஏற்பட்டதால், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வார்டில் இருந்த அவர், நள்ளிரவில் கழிப்பறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ரேஸ்கோர்ஸ் போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை