உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டசபை முற்றுகை போராட்டம்

சட்டசபை முற்றுகை போராட்டம்

மேட்டுப்பாளையம்: மறைந்த தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் டாக்டர் சிவசாமியின், பத்தாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி, மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் வேணுகோபால், டாக்டர் சிவசாமியின் போராட்ட வரலாற்றையும், தியாகத்தையும் நினைவு கூர்ந்தார். மேலும் ‘தமிழக அரசு, நெல் விலை, கரும்பு விலையை உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்தார். தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, முழுமையான பயிர் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற, 20ம் தேதி சென்னையில் சட்டசபை முற்றுகை போராட்டம் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற உள்ளது’ என்று பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி