உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லஞ்சம் வாங்க ஆள் நியமித்த சார்பதிவாளர் துாக்கியடிப்பு

லஞ்சம் வாங்க ஆள் நியமித்த சார்பதிவாளர் துாக்கியடிப்பு

கோவை: கோவை மாவட்டம், அன்னுாரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக இருந்தவர் செல்வ பாலமுருகன். இவர், பத்திரம் பதிவு செய்வதற்கும், வில்லங்கச் சான்று வாங்க வருவோரிடமும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. கடந்த ஜன., 22ல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.அதில், லஞ்சம் வாங்குவதற்காகவே, வாரச்சம்பளத்துக்கு ஒருவரை நியமித்திருப்பதை அறிந்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் பெற்ற வாக்குமூலம் அடிப்படையில், சோதனையை தீவிரப்படுத்தியபோது, ஏராளமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்தன. லஞ்சமாக வசூலிக்கும் தொகையை, கார் டிரைவர் மூலம் வங்கிகளில் செலுத்துவது தெரியவந்தது. கார் டிரைவர் மற்றும் சார்பதிவாளர் பயன்படுத்திய, மொபைல் போன்களில் இருந்த உரையாடல்களின் 'ஸ்கிரீன் ஷாட்', விசாரணை ஆவணமாக எடுக்கப்பட்டது. 500 ரூபாய் நோட்டுகளாக, 264 எண்ணிக்கையில், ரூ.1.32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு எதிரே உள்ள, பத்திரம் எழுதும் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ஒவ்வொரு பத்திரப்பதிவுக்கும் தலா ரூ.1,000 வீதம் சார்பதிவாளருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமென கூறினர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார்பதிவாளர் செல்வ பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்து, அதன் அறிக்கையை பத்திரப்பதிவு துறைக்கு அனுப்பினர்.இச்சம்பவம் நடந்து எட்டு மாதங்களாகியும், அவர் மீது நடவடிக்கை எடுக்காமல், பத்திரப்பதிவு துறை உயரதிகாரிகள் கிடப்பில் போட்டனர். இதுதொடர்பாக, அக்., 2ல் நமது நாளிதழில், விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, சார்பதிவாளர் செல்வ பாலமுருகன், நாகப்பட்டினத்துக்கு துாக்கியடிக்கப்பட்டார். அம்மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில், அவரை வழிகாட்டி சார்பதிவாளராக நியமித்து, பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் நேற்று, உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

KAMARAJ M
அக் 10, 2024 15:45

இதுதான் தண்டனையா


praveen rajavel
அக் 10, 2024 09:32

Tamilnadu govts reluctance to eradicate middle men in govt offices gives extraordinary rise to corruption that even some assistants in every office will go with average of 15000 Rs per daybribe money.Thinking about how much some group "b"and group "a" officers will take home...They even dont care about DVAC, proper retirement.within one year of service some earn crores of Rupees as bribe money . This makes common man feels afraid of entering to get his govt service done in every office. ?


Jagadeesan gopalaswamy naidu
அக் 09, 2024 14:11

Dear Citizens. Funny punishment, transfer is not correct , required to remove from the service, World is full digitalization, Registered office required to change new metho s payment is only at Bank via Register . We are in out of India purchased more than 6 properties by our Boss, I am working as a manager noted all properties registered at Register office via Attorney and paying the duty to Revenue department, no corruption only fixed rate to lawyers . we never seen deeds offce , our attorney is going to deliver the properety document , if moratage bank laywer is going to complete the process


Bhaskaran
அக் 09, 2024 13:44

இவனுக்கு பதவிஉயர்வு கொடுப்பாங்க


Jysenn
அக் 09, 2024 11:52

Registration offices are government recognized collection centres. The government will never do anything to hurt the sentiments of the officers. If you have any doubt visit the Panakudi sub registrar office of Tirunelveli district. Sarvam Selvi Mayam/ Maayam.


saravan
அக் 09, 2024 10:58

அங்க போயி லஞ்சம் வாங்கவா... ஆறு மாசம் இடை நீக்கம் மற்றும் ஒரு வருடம் பெயில் இல்லா சிறையில் போடுங்க லஞ்சம் வாங்குகிறீர்களா பார்க்கலாம். ஒரு அரசு நினைத்தால் லஞ்சத்தை ஒழிக்க முடியாதா. ஒரு நாள் ஒரே நாளில் முடியும். லஞ்சம் = பதவிபரிப்பு


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 09, 2024 10:34

So one more udanpirappu is going to get employment opportunity in nagapattinam. Simply speaking vidiyal govt just transferred the corruption and not prevented or reduced it.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
அக் 09, 2024 10:19

லஞ்சம் ஊழல் செய்பவன் தேச துரோகி. அவனை சிறையில் போடாமல் வேறு இடத்திக்கு மாற்றம் செய்பவனும் துரோகியே.


VENKATASUBRAMANIAN
அக் 09, 2024 08:42

கேவலமாக இல்லை. திருடன் திருடிவிட்டால் உடனே ஜெயிலில் போடுகிறார்கள். இவன் என்ன யோக்கியமான. டிஸ்னி செய்து உள்ளே போட வேண்டும்


Gajageswari
அக் 09, 2024 08:31

அவர் தன் மேல் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்து இருப்பார். அதனால் நடவடிக்கை இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை